மேலும்

நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு பயணமாகிறார் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசிய பேரவை சந்திப்பு

தமிழ்த் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

சிறிலங்காவில் அதிகம் செலவிடும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள்

பிரித்தானிய  சுற்றுலாப் பயணிகளே சிறிலங்காவில் அதிகம் செலவிடுபவர்கள் என, ஆய்வில்  வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை வரையும் பணிகள் ஆரம்பம்- உறுதிப்படுத்தினார் ஹரிணி

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் உறுதியளித்தபடி, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை நிச்சயமாக ஒழிக்கப்படும் என சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

வீரமணி, வேல்முருகன் ஆகியோருடன் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு

தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு வேல்முருகனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி, சீமானுடன் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அதிமுக பொதுச்செயலர்  எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை, தமிழ்த் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

அனைத்துலக விவகாரங்களில் சிறிலங்காவுடன் நெருக்கமாக பணியாற்றவுள்ள சீனா

சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழுவின் துணைத் தலைவர் வாங் டோங்மிங் சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்‌ஷன் பெல்லனவை, பணி இடைநீக்கம் செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்த தமிழ் தேசிய பேரவை

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.

கணக்காய்வாளர் நாயகமாக சிறிலங்கா படையதிகாரி- அனுரவின் பரிந்துரை நிராகரிப்பு

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு,  இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிப்பதற்கு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க செய்த பரிந்துரையை,  அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.