தமிழ்நாட்டில் விறுவிறுப்பான வாக்களிப்பு – மாற்றத்துக்கான அடையாளம்? ^அடுத்த ஆண்டில் அதிபர் அல்லது நாடாளுமன்றத் தேர்தலை நடத்த தயார் – என்கிறார் மகிந்த ^புலிகள் மீண்டெழ முயன்றதற்கு ராஜபக்ச அரசே பொறுப்பு – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு ^தமிழ்நாட்டில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் – கடுமையான மும்முனைப் போட்டியில் ஓரங்கட்டப்பட்டது காங்கிரஸ் ^வடக்கிலுள்ள தமிழ் பேசும்மக்களுக்கு தனித்துவமான கல்வி அமைப்புத் தேவை - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ^யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தான் படை அதிகாரிகள் குழு – சிறிலங்கா கொமாண்டோக்கள் பலத்த பாதுகாப்பு ^உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு அமெரிக்க செனட்டில் ஆதரவு அதிகரிப்பு ^பிரித்தானியப் பெண்ணால் அனைத்துலக அளவில் சர்ச்சையில் சிக்குகிறது சிறிலங்கா – சுற்றுலாத்துறைக்கு விழுகிறது அடி ^வடக்கிற்கான தேசிய விரைவு நெடுங்சாலையின் முதற்கட்ட நிர்மாணம் குறித்து சீன நிறுவனத்துடன் பேச்சு ^தெற்கைவிட வடக்கிற்கே அபிவிருத்தியில் முன்னுரிமையாம் – மகிந்த ராஜபக்ச கூறுகிறார் ^
இன்றைய செய்திகள்
புதன், 23-04-2014
செவ்வாய், 22-04-2014
திங்கள், 21-04-2014
ஞாயிறு, 20-04-2014
சனி, 19-04-2014
வெள்ளி, 18-04-2014
வியாழன், 17-04-2014
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
இந்தியாவுக்கு எல்லாம் தெரியும் - என்கிறார் சம்பந்தன்
அவர்கள் எல்லா முன்னேற்றங்கள் குறித்தும் அறிவார்கள். தென்னாபிரிக்கா அரசாங்கம் இந்தியாவுக்கு விபரிக்கும். நாம் பிரிட்டோரியா அரசாங்கத்திடம் இந்தியாவின் பங்கின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ளோம். இந்தியா நீண்டகாலமாக அந்தப் பங்கை வகித்துள்ளது. [விரிவு]
மேற்குலகம் பொருளாதாரத் தடை விதித்தால் மாற்று நடவடிக்கைக்குத் தயாராகிறது சிறிலங்கா
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் நிலை ஏற்பட்டால், சிறிலங்கா உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான மாற்று வழிகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. [விரிவு]
சிறிலங்காவுக்கு எதிராக வர்த்தகத் தடை விதிக்குமா பிரித்தானியா?
சிறிலங்கா மீது பிரித்தானியா,  வர்த்தகத் தடையை  விதித்தால், தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதி கடுமையான பாதிப்பைச் சந்திக்கும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன. [விரிவு]
சிறிலங்கா: போரும் பொய்த்துப் போகும் நல்லிணக்க முயற்சிகளும்
தற்போது சிறிலங்காவில் இனப்பிளவுகளால் மட்டும் மோதல்கள் ஏற்படவில்லை. பல்வேறு மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளாலும் மோதல்கள் ஏற்படுகின்றன. பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கும் முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மத சமூகங்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. [விரிவு]
வடக்கு, கிழக்கிற்கான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு 28 ஆகியது – வன்னிக்கு ஒரு மேலதிக ஆசனம்
2013ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி, வன்னி மற்றும் நுவரெலிய மாவட்டங்களுக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை தலா ஒன்றினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. [விரிவு]
உல்லாச விடுதிகளல்ல மருத்துவமனைதான் முதலில் வேண்டும்: யாழ்ப்பாண மக்கள் குமுறல்
[ செவ்வாய்க்கிழமை, 20 ஏப்ரல் 2010, 07:07 GMT ] [ தி.வண்ணமதி ]
எப்போதுமே மக்கள் நிறைந்து வழியும் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் குடாநாட்டின் ஏனைய வைத்தியசாலைகளையும் உடனடியாகத் தரமுயர்த்த வேண்டிய அவசிய தேவையுள்ளது என யாழ். குடாநாட்டு மக்களும் அப்பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறுகிறார்கள் என கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

போருக்குப் பின்னான மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் உல்லாசப் பயணத்துறையினைக் குடாநாட்டில் மேம்படுத்தும் திட்டங்களுக்குத் துணையாக யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவமனைகளைத் தரமுயர்த்தும் விடயத்தில் கொழும்பு ஆட்சியாளர்கள் உடனடிக் கவனம் செலுத்த வேண்டுமென குடாநாட்டு மக்கள் கோரி உள்ளார்கள்.

'யாழ் குடாநாட்டில் சர்வதேச தரத்திலமைந்த விடுதிகளை அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது சிறந்ததொரு அம்சமே, ஆனால் குடாநாட்டில் திருப்திதரும் வகையில் அமைந்த மருத்துவ வசதிகள் இல்லையேல் உல்லாசப்பயணிகள் எங்கு செல்வார்கள்' என 70 வயதுடைய ஓய்வுபெற்ற அரச ஊழியரான தணிகாசலம் ராமச்சந்திரன் கொழும்பு ஆங்கில ஊடகத்திடம் கூறியுள்ளார்.

உதாரணமாக, கொழும்பின் பொறளைப் பகுதியில் அமைந்திருக்கும் றிச்வே மருத்துவமனைக்கு நிகராக, யாழ் போதனை வைத்தியசாலையின் 11ம் 12ம் இலக்க சிறுவர் விடுதிகளும் தரமுயர்த்தப்படவேண்டும் என அவர் கூறுகிறார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட 1,300 படுக்கைகளைக் கொண்ட யாழ் போதனா வைத்தியசாலைதான் குடாநாட்டிலுள்ள ஒரே ஒரு அளவில் பெரிய மருத்துவமனை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

குடாநாட்டின் 650,000க்கும் அதிகமான மக்களுக்கென இருக்கும் ஒரேயொரு அளவில் பெரிய மருத்துவமனையும் இதுதான்.

குடாநாட்டின் முதன்மையான இந்த மருத்துவமனையினை அபிவிருத்தி செய்யும் வகையில் அண்மைய மாதங்களில் சுகாதார அமைச்சு பல முனைப்புக்களை எடுத்திருப்பதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.பவானந்தன் கூறுகிறார்.

மருத்துவமனையின் சேவையினை மேலும் மேம்படுத்தும் வகையில் தென்பகுதியிலிருந்து 50 தாதியர் அனுப்பப்பட்டிருப்பதாகவும் நரம்பியல் பிரிவு கூடியவரைவில் திறக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

போதனா வைத்தியசாலையில் தற்போது 32 மருத்துவர்கள் பணியாற்றுவதாகவும் மருத்துவமனையின் மனிதவளத்தில் எந்தவிதமான குறைபாடோ தட்டுப்பாடோ இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் 28 இறுதியாண்டு மாணவர்களும் மருத்துவமனையின் மருத்துவர் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

யப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியின்கீழ் மூன்று பில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாண மருத்துவமனையின் புதிய கட்டடத் தொகுதியினை நிர்மாணிக்கும் பணிகள் கூடியவரைவில் ஆரம்பிக்கப்பட இருப்பதாக மருத்துவர் பவானந்தன் கூறுகிறார்.

ஆய்வுகூடத் தொகுதி, கதிரியக்க பரிசோதனைத் தொகுதி [Radiological Diagnosis Department], சத்திரசிகிச்சைக் கூடம், அவசர சிகிச்சைப் பிரிவு, மத்திய விநியோகப் பகுதி மற்றும் தொற்றுநீக்கும் பகுதி ஆகியவற்றை இந்தப் புதிய கட்டடத்தொகுதி தன்னகத்தே கொண்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்து நோயாளர்களின் துன்பங்களைப் போக்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தவறிவிட்டதாக கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கின் அபிவிருத்தியினை நோக்கிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் பரப்புரை செய்கின்ற போதும் குடாநாட்டின் சுகாதாரத்துறை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்துகிறார்.

தற்போதைய சூழமைவில் குடாநாட்டில் உல்லாச விடுதிகளை அமைப்பதை விட மருத்துவமனைகளைப் புனரமைக்கவேண்டியதே மிகவும் முதன்மையானது என பிரேமச்சந்திரன் சுட்டிக் காட்டுகிறார்.

குடாநாட்டின் சுகாதாரத்துறையின் தரத்தினை உயர்த்தும் வகையில் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தரத்திற்காவது யாழ் போதனா வைத்தியசாலை தரமுயர்த்தப்படவேண்டும் என்கிறார் அவர்.

கோப்பாய், மூளாய் மற்றும் மந்திகை மருத்துவமனைகளும் உடனடியாகக் கவனம் செலுத்தப்பட்டவேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
தமிழ்நாட்டில் விறுவிறுப்பான வாக்களிப்பு – மாற்றத்துக்கான அடையாளம்?
அடுத்த ஆண்டில் அதிபர் அல்லது நாடாளுமன்றத் தேர்தலை நடத்த தயார் – என்கிறார் மகிந்த
சிறிலங்கா செல்லும் பிரித்தானிய குடிமக்களுக்கு புதிய பயண எச்சரிக்கை
புலிகள் மீண்டெழ முயன்றதற்கு ராஜபக்ச அரசே பொறுப்பு – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் – கடுமையான மும்முனைப் போட்டியில் ஓரங்கட்டப்பட்டது காங்கிரஸ்
வடக்கிலுள்ள தமிழ் பேசும்மக்களுக்கு தனித்துவமான கல்வி அமைப்புத் தேவை - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தான் படை அதிகாரிகள் குழு – சிறிலங்கா கொமாண்டோக்கள் பலத்த பாதுகாப்பு
உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு அமெரிக்க செனட்டில் ஆதரவு அதிகரிப்பு
பிரித்தானியப் பெண்ணால் அனைத்துலக அளவில் சர்ச்சையில் சிக்குகிறது சிறிலங்கா – சுற்றுலாத்துறைக்கு விழுகிறது அடி
வடக்கிற்கான தேசிய விரைவு நெடுங்சாலையின் முதற்கட்ட நிர்மாணம் குறித்து சீன நிறுவனத்துடன் பேச்சு