திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு – சிறிலங்கா அரசு விசனம் ^இலங்கையர்களை தொடர்ந்தும் திருப்பி அனுப்புகிறது அவுஸ்திரேலியா ^வெற்றி விழாவில் படகு கவிழ்ந்ததால் கடற்படைத் தளபதியின் பதவி பறிப்பு? – ஆங்கில ஊடகம் ^சிறிலங்கா அரசுக்கு கோத்தா எச்சரிக்கை ^கனடாவுக்கு ஆட்களைக் கடத்திய நான்கு தமிழர்கள் டொமினிக்கன் குடியரசில் கைது ^பிரித்தானிய காவல்துறையினரால் சிறிலங்காவைச் சேர்ந்த 10 முகவர்கள் கைது ^தோற்றுப்போனதால் நடுவரைத் தாக்கிய மகிந்தவின் மகன் இடைநிறுத்தம்? ^சிறிலங்காவுக்கு துணை நிற்குமாம் இந்தியா – அசோக் கே காந்தாவின் உறுதிமொழி ^கிழக்கிலும் சிங்களவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கிறது இந்தியா ^யாழ்ப்பாணத்திற்கான பயணம் - ஒரு பயணியின் குறிப்புகள் ^
இன்றைய செய்திகள்
வியாழன், 23-05-2013
புதன், 22-05-2013
செவ்வாய், 21-05-2013
திங்கள், 20-05-2013
ஞாயிறு, 19-05-2013
சனி, 18-05-2013
வெள்ளி, 17-05-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? - பீரிஸ் விளக்கம்
மாகாணசபையின் அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான சட்டத் திருத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் சல்மான் குர்ஷித் எச்சரித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. [விரிவு]
'தமிழீழ சுதந்திர சாசனம்' : நாடுகடந்த தமிழீழ அரசு வெளியீடு
அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் மே 15ம் நாள் முதல் இடம்பெற்றிருந்த 'நாடுகடந்த தமிழீழ அரசின் முரசறைவு மாநாடு' முள்ளிவாய்க்கால் நிகழ்வேந்தல் நிகழ்வுகளுடன் 18ம் நாள் நிறைவு பெற்றது. [விரிவு]
புலிகளைப் பிளவுபடுத்தவே பிறேமதாச ஆயுதங்களைக் கொடுத்தாராம் – அவரது மகன் ஒப்புதல்
மாத்தயா தலைமையிலான புலிகளை பலப்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு எதிராக பிளவை ஏற்படுத்தவே அவர் அவ்வாறு ஆயுதங்களை வழங்கினார்” என்றும் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார். [விரிவு]
லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா, கடத்தப்பட்டதா? – புதிதாக கிளம்பும் சந்தேகம்
விமானத்தைக் கடத்துவதற்கு உக்ரேனிய நாட்டவரான விமானி மடோச்கோ அன்ஸ்ரோலி விடுதலைப் புலிகளுடன் பேரம் பேசியிருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். [விரிவு]
கோத்தாவை கலங்க வைத்த இந்திய ஊடகங்கள்
இதனால் விசனமடைந்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நேற்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் நடத்திய கலந்துரையாடல் குறித்து விளக்கம் கேட்டுள்ளார். [விரிவு]
இந்தியா - சீனா: இருநாடுகளும் தம் முறுகல் நிலையை தணிக்கும் முயற்சியில் வெற்றி பெறுவார்களா?
[ வியாழக்கிழமை, 15 டிசெம்பர் 2011, 09:32 GMT ] [ நித்தியபாரதி ]

இரு நாடுகளிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ உயர்மட்ட சந்திப்பானது இரு தரப்பும் தமக்கிடையிலான பனிப்போரை முடிவிற்குக் கொண்டு வருவதை நோக்காகக் கொண்டு செயற்படுவதையே சுட்டிக்காட்டுகின்றது.

இவ்வாறு டெல்லியுள்ள ஐவர்கலால் நேரு பல்கலைக்கழத்தின் சீன விவகாரங்களுக்கான பேராசிரியர் Srikanth Kondapalli* எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

சீன இராணுவத்தின் பிரதித் தளபதியும்  கட்டளைத் தளபதியுமான மா சியாவோரியன், [China military's Deputy Chief of General Staff General Ma Xiaotian] இந்திய பாதுகாப்புச் செயலர் சசி கான்ற் சர்மாவுடன் Shashi Kant Sharma டிசம்பர் 09 அன்று  நான்காவது பாதுகாப்பு கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஏற்கனவே இவ்வாண்டின் யூன் மாதத்தில் சீனப் பிரதித் தளபதியால் திட்டமிடப்பட்ட இந்திய பயணம் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.  

உண்மையில், 'சர்ச்சைக்குரிய' பகுதியில் கட்டளைகளை வழங்குகின்ற காரணத்தை முன்வைத்து இந்தியாவின் வடபகுதிக்கான கட்டளைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ஜஸ்வல்லிற்கு N S Jaswal புதுடில்லியிலுள்ள சீனத் தூதரகம் நுழைவிசைவை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்த பின்னரே, மே 2006 ல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பகுதியாக ஆரம்பிக்கப்பட்ட இரு நாடுகளின் இராணுவ உயர் மட்டக் குழுக்களிற்கிடையில் மேற்கொள்ளப்படும் கருத்துப் பரிமாறலை நிறுத்தம் செய்து இந்தியா பதிலடி கொடுத்திருந்தது.

சீனா மற்றும் இந்திய இராணுவக் குழுக்களிற்கிடையில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு, இருநாடுகளும்  தமது அணுகமுறையை உறுதியாக மேற்கொண்ட போதிலும் கூட, இந்தியாவின் பாதுகாப்புக் கலந்துரையாடலின் போது எந்தவொரு உறுதியான தீர்மானங்களோ  அல்லது உறுதியான புதிய அளவீடுகளோ அறிவிக்கப்படவில்லை.

இருந்தபோதிலும், பல்வேறு மட்டங்களில் பாதுகாப்பு விடயம் சார் கருத்துக்களைப் பரிமாறுவதற்கான துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், தொடர்ச்சியாக CBM களை எல்லைப்புறங்களில் நடைமுறைப்படுத்துவதெனவும் இப்பாதுகாப்பு கலந்துரையாடலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அடுத்த மாதத்தில் சீன இராணுவத்தின் மத்திய நிலை அதிகாரிகள் இந்தியாவிற்கு வருகை தந்து இந்திய மத்திய நிலை இராணுவ அதிகாரிகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்வர் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எல்லைப் புறங்களில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதை நோக்காகக் கொண்டு பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்கள் மற்றும் தொடர்பாடல்களை மேற்கொள்வதெனவும் இந்திய – சீன இராணுவ உயர் மட்டப் பேச்சுக்களின் போது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதற்கு முதல் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் முதலில் நவம்பர் 2007 ல் பீஜிங்கிலும், இரண்டாவதாக டிசம்பர் 2008 ல் புதுடில்லியிலும், மூன்றாவதாக ஜனவரி 2010 ல் பீஜிங்கிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, முதலிரண்டு கலந்துரையாடல்களின் போதும் இரு நாட்டு கூட்டு இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அதிலிருந்து இரு நாட்டு இராணுவக் குழுக்களும் பரஸ்பரம் இரு நாடுகளிற்கும் பயணம் மேற்கொண்டிருந்தன. சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் பல விடயங்களில் கருத்து ரீதியாக ஒற்றுமைப்பட்டிருக்காவிட்டாலும் கூட 'தீவிரவாதம்' என்ற விடயத்தைத் தோற்கடிப்பதில் இரு நாடுகளும் இணைந்தே செயற்பட்டன.

அதாவது ;தீவிரவாதம்' என்பது இவ்விரு நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்த முதலாவது சவாலாக இருந்தது. அதாவது சீனாவிற்கு 'எல்லா சூழ்நிலை மாற்றங்களின் போதும்' உற்ற நண்பனாக உள்ள பாகிஸ்தானுடன் 'தீவிரவாதம்' என்ற விடயத்தில் ஒன்று சேர்வதில் சீனா தயக்கம் காட்டியிருக்கலாம் என்பதையே இது காட்டுகின்றது.

சீனா இரு ஆண்டுகளிற்கு முன்னர் இந்தியா மீது குற்றம் சாட்டியிருந்தது. அதாவது கடற்கொள்ளை நடவடிக்கைகளை எதிர்ப்பதற்காக ஏடன் வளைகுடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தனது நீர்மூழ்கிக் கப்பலை இந்திய நீர்மூழ்கிக் கப்பல் அடியொற்றிச் சென்றதாக சீனா குற்றம் சுமத்தியிருந்தது.

நவம்பர் 2003ல் சீனாவின் Qingdao என்னும் இடத்திலும், டிசம்பர் 2005ல் இந்தியாவின் Cochin என்ற இடத்திலும் இரு நாட்டு கடற்படையினரும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் கூட்டாக ஈடுபட்டிருந்த போதிலும், பின்னர் டிசம்பர் 2010 ல் [சீனப் பிரதமர் வென் ஜியாபோ, புதுடில்லிக்கு பயணம் மேற்கொண்ட போது] இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைக்கான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போதிலும் கூட இவ்விரு நாடுகளுக்கும் இடையில் உறுதியான கூட்டுறவுச் செயற்பாடுகள்  மேற்கொள்ளப்படவில்லை.

விமானத் துறைசார் விடயத்திலும் கூட இரு நாட்டு விமானத் தளபதிகளும் பரஸ்பரம் இரு நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளனர். இந்திய விமானப் படையின் சூர்யா கிரான் பயிற்சியாளர்கள் Zhuhai வான் சாகச நிகழ்வில் கலந்து கொண்ருடிருந்தனர். மே 2008 ல் சிக்குவன் மாகாணத்தில் இடம்பெற்ற புவியதிர்ச்சியின் போது இந்திய விமானப் படையினர் நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் வழங்கியிருந்தனர்.

பல்வேறு எதிர்ப்புக்கள் உள்ளபோதிலும் ஜெனரல் மாவின் இந்திய பயணமானது வேறோரு வகையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.    அதாவது பிற்போடப்பட்டிருந்த அனைத்துலக பௌத்த சாசனம் தொடர்பான 15வது சிறப்பு பிரதிநிதித்துவ சந்திப்பானது புதுடில்லியில் ஒருவாரத்திற்கு முன்னர் தலாய்லாமாவால்  மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே மீளவும் சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளிற்கும் இடையிலான இராணுவ உயர் மட்டச் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இரு நாடுகளிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ உயர்மட்ட சந்திப்பானது இரு தரப்பும் தமக்கிடையிலான பனிப்போரை முடிவிற்குக் கொண்டு வருவதை நோக்காகக் கொண்டு செயற்படுவதையே சுட்டிக்காட்டுகின்றது.

இரண்டாவதாக, தென் சீனக்கடலில் வியட்நாமுடன் இணைந்து எரிசக்தி வளங்களைக் கண்டுபிடிப்பதற்காக 1988 ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்வதற்காக இந்தியா தீர்மானித்த நிலையில், அது யுத்தமாக உருவெடுக்கலாம் என்ற சூழல் நிலவிய போது சீன இராணுவ அதிகாரிகளின் பிரதித் தளபதி மா, இந்தியாவிற்கு வருகை தந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதே.

தென் சீனக்கடற் பிராந்தியத்தில் சீனாவானது, அமெரிக்கா, வியட்நாம், பிலிப்பீன்ஸ் மற்றும் ஏனைய நாடுகளுடன் 'உளவியல் ரீதியான யுத்தத்தை' மேற்கொண்டு வருகின்றது. 'ஊடகப் போரின்' தொடர்ச்சியில், தென் சீனக் கடலில் இந்தியா தனது ஈடுபாட்டைக் காட்டிவருவதை எதிர்த்து சீன ஊடகம் ஒன்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்ததுடன், இக்கடற் பிராந்தியத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடும் இந்திய நிறுவனங்களிற்கு எதிராக சீன இராணுவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ் ஊடகத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தியாவிற்கு பாடம் கற்பிக்க வேண்டிய தேவையுள்ளது என சீன இராணுவப் பத்திரிகையான Liberation Army Daily ல் பிரசுரிக்கப்பட்ட செய்திகளிலும் தெரிவிக்கப்பட்டிருந்தன. மறுபுறமாக, இந்தியாவானது தென்சீனக் கடலில் ஆராய்ச்சியில் சட்ட ரீதியாக ஈடுபடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியைப் பெற்றுக் கொண்டதாகவும், சுதந்திரமாக கடற்பாதைகளைப் பயன்படுத்துவதற்கான கோட்பாடுகளிற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் இந்தியா தெரிவித்திருந்தது.

மூன்றாவதாக, சீன- இந்திய எல்லைப்புறங்களில் பாதுகாப்புக்களை அதிகரிப்பதற்கான திட்டங்களை இந்தியாவுடன் இணைந்து விரிவாக்குவதையும் நோக்காகக் கொண்டே மாவின் இந்திய பயணம் அமைந்திருந்தது. அதாவது திபெத் மற்றும் ஏனைய எல்லைப் புறங்களில் இராணுவ செயற்பாட்டை நவீனமயப்படுத்துதலும் இதற்குள் உள்ளடங்குகின்றது.

குறிப்பாக, எல்லைப் புறப் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்வதற்காக தனது இராணுவத்தை நவீனமயப்படுத்தவுள்ள இந்தியா இதற்காக 60,000 படைவீரர்களை ஒன்றுசேர்க்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் ஏற்கனவே மூன்று SU-30 விமானத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிக்கு முக்கிய ஆயுத தளபாடங்களைக் கொண்டு செல்லவுள்ளதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.  

நான்காவதாக, 2012 ஒக்ரோபரில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள 18வது கம்யூனிசக் கட்சியின் மாநாடு மற்றும் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் மீள் ஒழுங்குபடுத்தலில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான   நகர்வுகளை ஜெனரல் மா மேற்கொள்வதாக நம்பப்படுகின்றார்.
 
இவை அனைத்தும் திட்டமிட்டபடி இடம்பெற்றால், ஜெனரல் மா விமானப் படைத் தளபதியாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய சீன விமானப்படைத் தளபதி மத்திய இராணுவ ஆணைக்குழுவின் உதவித் தலைவராகப் பொறுப்பேற்கலாம். இந்நிலையில், மாவுடன் தொடர்புகளைப் பேணுவதானது பயன்மிக்கதாக அமையலாம்.

ஐந்தாவதாக, மிகவும் கூர்மையான நினைவுத் திறன் கொண்ட மா ஒழுங்கமைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான இயலுமையைக் கொண்டுள்ளார். ஆனால் ஜெனரல் மா கோரச் செய்திகளை செவிமடுக்கின்றவராக இருப்பதே அவரது பலவீனமாகும்.

*Srikanth Kondapalli is Professor in Chinese Studies at JNU

செய்தி வழிமூலம்: Rediff News
மொழியாக்கம் : நித்தியபாரதி 

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு – சிறிலங்கா அரசு விசனம்
இலங்கையர்களை தொடர்ந்தும் திருப்பி அனுப்புகிறது அவுஸ்திரேலியா
வெற்றி விழாவில் படகு கவிழ்ந்ததால் கடற்படைத் தளபதியின் பதவி பறிப்பு? – ஆங்கில ஊடகம்
சிறிலங்கா அரசுக்கு கோத்தா எச்சரிக்கை
கனடாவுக்கு ஆட்களைக் கடத்திய நான்கு தமிழர்கள் டொமினிக்கன் குடியரசில் கைது
பிரித்தானிய காவல்துறையினரால் சிறிலங்காவைச் சேர்ந்த 10 முகவர்கள் கைது
தோற்றுப்போனதால் நடுவரைத் தாக்கிய மகிந்தவின் மகன் இடைநிறுத்தம்?
சிறிலங்காவுக்கு துணை நிற்குமாம் இந்தியா – அசோக் கே காந்தாவின் உறுதிமொழி
கிழக்கிலும் சிங்களவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கிறது இந்தியா
யாழ்ப்பாணத்திற்கான பயணம் - ஒரு பயணியின் குறிப்புகள்