முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த தீர்ப்பு நாளை ^இனி என்ன நடக்கும் இலங்கையில்? - பேராசிரியர் ராமு மணிவண்ணன் ^இந்தியாவில் அடிப்படை உரிமைகள் ஏதுமற்று கைதிகள் போல் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் ^தமிழ்நாட்டில் விறுவிறுப்பான வாக்களிப்பு – மாற்றத்துக்கான அடையாளம்? ^அடுத்த ஆண்டில் அதிபர் அல்லது நாடாளுமன்றத் தேர்தலை நடத்த தயார் – என்கிறார் மகிந்த ^புலிகள் மீண்டெழ முயன்றதற்கு ராஜபக்ச அரசே பொறுப்பு – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு ^தமிழ்நாட்டில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் – கடுமையான மும்முனைப் போட்டியில் ஓரங்கட்டப்பட்டது காங்கிரஸ் ^வடக்கிலுள்ள தமிழ் பேசும்மக்களுக்கு தனித்துவமான கல்வி அமைப்புத் தேவை - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ^யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தான் படை அதிகாரிகள் குழு – சிறிலங்கா கொமாண்டோக்கள் பலத்த பாதுகாப்பு ^உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு அமெரிக்க செனட்டில் ஆதரவு அதிகரிப்பு ^
இன்றைய செய்திகள்
புதன், 23-04-2014
செவ்வாய், 22-04-2014
திங்கள், 21-04-2014
ஞாயிறு, 20-04-2014
சனி, 19-04-2014
வெள்ளி, 18-04-2014
வியாழன், 17-04-2014
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
ஜோசப் பரராஜசிங்கத்தையும், லசந்தவையும் கொன்றது சிறிலங்கா அரசாங்கமே – எரிக் சொல்ஹெய்ம் குற்றச்சாட்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தையும், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவையும் சிறிலங்கா அரசாங்கமே படுகொலை செய்தது என்று, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். [விரிவு]
இந்தியாவுக்கு எல்லாம் தெரியும் - என்கிறார் சம்பந்தன்
அவர்கள் எல்லா முன்னேற்றங்கள் குறித்தும் அறிவார்கள். தென்னாபிரிக்கா அரசாங்கம் இந்தியாவுக்கு விபரிக்கும். நாம் பிரிட்டோரியா அரசாங்கத்திடம் இந்தியாவின் பங்கின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ளோம். இந்தியா நீண்டகாலமாக அந்தப் பங்கை வகித்துள்ளது. [விரிவு]
மேற்குலகம் பொருளாதாரத் தடை விதித்தால் மாற்று நடவடிக்கைக்குத் தயாராகிறது சிறிலங்கா
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் நிலை ஏற்பட்டால், சிறிலங்கா உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான மாற்று வழிகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. [விரிவு]
சிறிலங்காவுக்கு எதிராக வர்த்தகத் தடை விதிக்குமா பிரித்தானியா?
சிறிலங்கா மீது பிரித்தானியா,  வர்த்தகத் தடையை  விதித்தால், தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதி கடுமையான பாதிப்பைச் சந்திக்கும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன. [விரிவு]
சிறிலங்கா: போரும் பொய்த்துப் போகும் நல்லிணக்க முயற்சிகளும்
தற்போது சிறிலங்காவில் இனப்பிளவுகளால் மட்டும் மோதல்கள் ஏற்படவில்லை. பல்வேறு மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளாலும் மோதல்கள் ஏற்படுகின்றன. பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கும் முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மத சமூகங்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. [விரிவு]
இம்முறை சிறிலங்கா வெற்றி பெறுவது கடினம் - ‘நியுயோர்க் ரைம்ஸ்‘
[ புதன்கிழமை, 21 மார்ச் 2012, 08:49 GMT ] [ நித்தியபாரதி ]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த்துறை சிறிலங்கா தனக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையில் தனக்குச் சார்பாக வெற்றியைப் பெற்றுக் கொள்வது கடந்த தடவையை விடக் கடினமானதாக இருக்கும் என நியுயோர்க் ரைம்ஸ் ஏட்டில், ஜெனீவாவில் இருந்து NICK CUMMING-BRUCE எழுதிய செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

இதனை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட உள்நாட்டுப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சி, ஜெனிவாவில் இராஜதந்திர ரீதியான விவாதத்தை உருவாக்கியுள்ளதுடன், சிறிலங்காவை கோபம் கொள்ளவும் செய்துள்ளது.

'யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அனைத்துலக சட்ட விதிமுறைகளை மீறி மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மீறல்கள் தொடர்பாக நம்பகமான, சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இவ்வாறான மீறல்கள் இடம்பெறக் காரணமாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அமெரிக்காவின் ஆதரவுடன் முன்வைக்கப்படும் பிரேரணை தொடர்பாக விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ் விவாதத்துக்கான கூட்டத்தொடர் வியாழனன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தால் 'மனித உயிர்களைக் காப்பாற்றும் நடவடிக்கை' என்ற பெயரில் தமிழ்ப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40,000 உயிர்கள் வரை காவு கொள்ளப்பட்டதாக கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட ஐ.நா வல்லுனர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்பினரும் யுத்த மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்களை மேற்கொண்டதற்கான நம்பகமான சாட்சியங்களை வல்லுனர் குழுவினர் தமது விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

தற்போது அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் பிரேரணையானது சிறிலங்காவுடன் புரிந்துணர்வுடன், கூட்டாக இணைந்து மேற்கொள்வதற்கான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட யுத்தகால மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள பயனுள்ள, உறுதியான பரிந்துரைகளை துரிதமாக அமுல்படுத்துவதை நோக்காகக் கொண்டே முன்வைக்கப்படுவதாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதர் எலீன் டோனஹே தெரிவித்துள்ளார்.

'சிறிலங்கா அரசாங்கம் சரியான திசையில் பயணிப்பதை ஊக்குவிப்பதற்கான நேர்மையான, உண்மையான முயற்சியாகவே' இப்பிரேரணை உள்ளதாகவும், பல மாதங்களாக சிறிலங்காவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்புத் தொடர்பாடல்களுக்குப் பின்னரே தற்போது இப்பிரேரணை முன்வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இப்பிரேரணைக்கு எதிராக வாக்களிக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் பல நாடுகளின் ஆதரவைக் கோரி நிற்கின்றது. இந்த வகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ஆசியா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசாங்கத் தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், அமெரிக்காவின் இப்பிரேரணைக்கு எதிராக இந்தநாடுகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் ஆதரவுடன் முன்வைக்கப்படும் பிரேரணை அனைத்துலக சமூகத்தை இரு துருவங்களாகப் பிளவுபடுத்துவதற்கு வழிவகுப்பதாகவும், சிறிலங்காவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எனவும் சிறிலங்கா வெளியுறவுஅமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்பட்டு வரும், தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஆதரவைத் திரட்டுவதற்காக ஜெனீவாவிற்கு 70 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்றை சிறிலங்கா அனுப்பி வைத்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டில் மனிதஉரிமைகளை மேம்படுத்துவதற்கான செயற்திட்டம் ஒன்றை ஏற்கனவே வரைந்துள்ளதாக பெப்ரவரி மாத முடிவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்க அமைச்சரும் மனித உரிமைகளுக்கான சிறப்புத் தூதுவருமான மகிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.

முன்னர் யுத்த வலயங்களாக இருந்த பகுதிகளை புனரமைப்புச் செய்வதற்கான கால அவகாசம் சிறிலங்காவுக்கு தேவைப்படுவதாகவும், இது தொடர்பில் வெளிநாடுகளிடமிருந்து சிறிலங்கா மீது அழுத்தங்களோ அல்லது 'தேவையற்ற பிரேரணையோ' முன்வைக்கப்படுவதற்கான நேரம் இதுவல்ல எனவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேற்குலக நாடுகளின் தீர்மானத்தை எதிர்த்து சிறிலங்காவில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக மனிதஉரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளதுடன், பிரேரணைக்கு ஆதரவாக தமது கருத்துக்களைத் தெரிவிக்கும் ஆர்வலர்கள் தோற்கடிக்கப்பட்ட புலிகளின் ஆதரவாளர்கள் என சிறிலங்கா அரசாங்க சார்பு ஊடகங்களால் முத்திரை குத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

தமது நடவடிக்கைகளில் அரசாங்கப் பிரதிநிதிகள் குறுக்கீடு செய்வதாக ஜெனீவாவில் பிரசன்னமாகியுள்ள சிறிலங்காவைச் சேர்ந்த அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன், மனித உரிமைகள் பேரவையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் கூட தமது குழு உறுப்பினர்களை மீண்டும் மீண்டும் அரசாங்கப் பிரதிநிதிகள் குழு ஒளிப்படம் எடுத்ததாகவும் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இம்முறைப்பாடுகளை பேரவையின் தலைவரான உருகுவேயைச் சேர்ந்த Laura Dupuy Lasserre ஆல் மீளவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பாக மேற்கொள்ளப்படும் விவாதத்தின் வெளிப்பாடானது சிறிலங்காவுக்கான சோதனைக் களமாக இருப்பது போல், மனித உரிமைகள் பேரவைக்கான சோதனைக் களமாகவும் உள்ளது.

2009 இல், அதாவது சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் நிறைவடைந்த கையோடு, கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தொடரின் போது ஆசியாவைச் சேர்ந்த சிறிலங்காவின் அயல்நாடுகள் மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் ஆதரவுடன் சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மீறல்களுக்கு எதிராக முன்வைக்கப்படவிருந்த பிரேரணையை வெற்றி கொண்டது.

ஆனால் இந்தத் தடவை சிறிலங்கா தனக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையில் தனக்குச் சார்பாக வெற்றியைப் பெற்றுக் கொள்வதென்பது கடந்த தடவையை விடக் கடினமானதாக இருக்கும் என இராஜதந்திரிகள் மற்றும் பேரவையின் அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிலங்காவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் சிறுபான்மைத் தமிழ் மக்களை மட்டுமல்ல அரசாங்கத்தை விமர்சிப்பவர்களையும் பாதிப்படையச் செய்வதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

கடந்த ஒக்ரோபர் மாதத்திலிருந்து சிறிலங்காவில் 32 வரையான ஆட்கடத்தல் மற்றும் காணாமற்போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச்சபை கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்கா முன்னர் போன்று பிராந்திய ஒருமைப்பாட்டை எதிர்பார்த்து நிற்கமுடியாது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து ஆகியன பரிந்துரையை எதிர்த்து குரல் கொடுத்துள்ளன.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தளவில் இதன் உள்நாட்டுக்குள் பல்வேறு அரசியல் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால் மறுபுறத்தில் இந்தியா, சிறிலங்காவின் அயல்நாடாகவும், கூட்டாளி நாடாகவும் உள்ளது.

சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையை ஆதரிப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த திங்களன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த தீர்ப்பு நாளை
இனி என்ன நடக்கும் இலங்கையில்? - பேராசிரியர் ராமு மணிவண்ணன்
இந்தியாவில் அடிப்படை உரிமைகள் ஏதுமற்று கைதிகள் போல் வாழும் ஈழத்தமிழ் அகதிகள்
தமிழ்நாட்டில் விறுவிறுப்பான வாக்களிப்பு – மாற்றத்துக்கான அடையாளம்?
அடுத்த ஆண்டில் அதிபர் அல்லது நாடாளுமன்றத் தேர்தலை நடத்த தயார் – என்கிறார் மகிந்த
சிறிலங்கா செல்லும் பிரித்தானிய குடிமக்களுக்கு புதிய பயண எச்சரிக்கை
புலிகள் மீண்டெழ முயன்றதற்கு ராஜபக்ச அரசே பொறுப்பு – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் – கடுமையான மும்முனைப் போட்டியில் ஓரங்கட்டப்பட்டது காங்கிரஸ்
வடக்கிலுள்ள தமிழ் பேசும்மக்களுக்கு தனித்துவமான கல்வி அமைப்புத் தேவை - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தான் படை அதிகாரிகள் குழு – சிறிலங்கா கொமாண்டோக்கள் பலத்த பாதுகாப்பு