மகிந்தவைப் பழி தீர்க்கும் பிரித்தானியா – கிளாஸ்கோ செல்லாததன் இரகசியம் ^சிறிலங்கா விவகாரத்தில் நோர்வே ஆர்வம் காட்டவில்லை - சித்தார்த்தன் ^ஐ.நாவுக்கான துணைத் தூதுவர் பதவியை ஏற்கத் தயார் – வெளிவிவகாரக் குழு முன் சிசன் தெரிவிப்பு ^சிறிலங்காவுடனான உறவுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு முக்கிய பங்கு – சீன இராணுவ அதிகாரி ^கிளாஸ்கோவில் இருந்து மகிந்தவைத் துரத்திய போர்க்குற்றச்சாட்டுகள் – தி ரைம்ஸ் ^உள்நாட்டு விசாரணைக்கு மேற்கு நாடுகள் ஒத்துழைக்கவில்லை – சிறிலங்கா ஆணைக்குழு குற்றச்சாட்டு ^அடுத்து மியான்மார் செல்கிறார் சுஸ்மா – சிறிலங்காவுக்கு ஏமாற்றம் ^ஐ.நா விசாரணைக்கு சரியான தகவல்களை சிறிலங்கா வழங்க வேண்டும் – ஜப்பானும் அறிவுறுத்துகிறது ^சிறிலங்காவின் ஊடக சுதந்திரம் – அமெரிக்கா கவலை ^சிறிலங்காவின் மோடியாக அதிபர் ராஜபக்ச உள்ளார் - இந்திய ஆய்வாளர் ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 29-07-2014
திங்கள், 28-07-2014
ஞாயிறு, 27-07-2014
சனி, 26-07-2014
வெள்ளி, 25-07-2014
வியாழன், 24-07-2014
புதன், 23-07-2014
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
சிறிலங்காவின் 'இனப்படுகொலை' - அனைத்துலகச் சட்டங்கள் கூறுவதென்ன?
சிறிலங்கா அரசாங்கம் இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் போன்றவற்றை மேற்கொண்டதால் இது குற்றவாளி என்பதை ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்தால் வரையப்பட்ட சட்டங்கள் உறுதிப்படுத்துகின்றமை இங்கு தெளிவாகும். [விரிவு]
அடுத்தடுத்து சிறிலங்கா செல்லும் சீன, ஜப்பானிய தலைவர்கள் – கொழும்புக்கு நெருக்கடி
இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில், முரண்பாடுகள் நிலவிவரும் சூழலில், இருநாடுகளினதும், தலைவர்களை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் எதிர்கொள்வதில் சிறிலங்கா நெருக்கடிகளை எதிர்நோக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [விரிவு]
சிறிலங்காவில் எழுச்சி பெறும் இஸ்லாமியர் எதிர்ப்பும் எதிர்கால ஆபத்துகளும் - தயான்
நாட்டில் பொது பல சேன என்கின்ற பௌத்த தீவிரவாத அமைப்பானது முஸ்லீம் சமூகத்தை தேசிய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியமை மிகப் பெரிய தவறாகும். [விரிவு]
இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்தது இந்தியா - ஜெனிவாவில் இரட்டை வேடம்
பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. [விரிவு]
ஐ.நா விசாரணைக் குழுவுக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டதா? – இந்திய வெளிவிவகார அமைச்சு பதில்
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து, விசாரிக்கும் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு இந்தியா நுழைவிசைவு வழங்க மறுத்ததா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார். [விரிவு]
பிரித்தானியாவின் நாடுகடத்தும் கொள்கையால் சித்திரவதைக்கு உள்ளாகும் தமிழர்கள்
[ சனிக்கிழமை, 09 யூன் 2012, 06:09 GMT ] [ நித்தியபாரதி ]
பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஹரி என்கின்ற இத்தமிழ் இளைஞன் 17 நாட்கள் வரை சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தப்பிப்பிழைத்த பின் மன அழுத்தத்துக்கு உள்ளாகியமைக்கு பிரித்தானிய அரசாங்கமே காரணமாகும்.

இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக் கொண்ட guardian.co.uk இணையத் தளத்தில் Donna Covey எழுதி யுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

பிரித்தானியாவிலிருந்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழரான ஹரி என்பவர் சிறிலங்கா அதிகாரிகளால் சித்திரவதைப்படுத்தப்பட்டதானது மிகப் பயங்கரமான சாட்சியமாக இருப்பதுடன், புகலிடம் கோரி வரும் மக்கள் இந்நாட்டில் எவ்வாறு நடாத்தப்படுகின்றார்கள் என்பதைக் காண்பிக்கின்ற, தலைகுனிய வைக்கின்ற, வெட்கப்பட வேண்டிய எடுத்துக்காட்டாக ஹரி என்கின்ற இத்தமிழ் இளைஞனின் வாக்குமூலம் உள்ளது.

பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஹரி என்கின்ற இத்தமிழ் இளைஞன் 17 நாட்கள் வரை சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தப்பிப்பிழைத்த பின் மன அழுத்தத்துக்கு உள்ளாகியமைக்கு பிரித்தானிய அரசாங்கமே காரணமாகும். இவர் தாங்கும் வடுக்களை பிரித்தானியா பொறுப்பேற்று சீர்செய்யுமா?

சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் அங்கே பாதுகாப்பற்ற ஆபத்தான சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளமையானது தற்போது அதிகரி த்துள்ளதை சாட்சியங்கள் மூலம் அறியமுடிகின்றது. சிறிலங்காவில் மனித உரிமை மீறப்படுவதால் பிரித்தானியாவிலிருந்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த 40 பேரை மீள அனுப்ப வேண்டாம் என பிரித்தானிய உயர் நீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இவ்வாண்டில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டமையை சான்றுபடுத்தும் 13 சம்பவங்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் பதிவுசெய்துள்ளதுடன், பிரித்தானியாவிலிருந்து சிறிலங்காவுக்கு ஆட்களைத் திருப்பி அனுப்புவதை நிறுத்துமாறும் இக்கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்திருந்தது. பிரித்தானியாவிலிருந்து பலவந்தமாக சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் பலர் மீண்டும் தமது சொந்த நாட்டு அதிகாரிகளால் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டமையை 'சித்திரவதைகளிலிருந்து விடுவித்தலுக்கான' அமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.

இவ்வாறு சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படும் மக்கள் துன்புறுத்தப்படுவதானது நீண்டகாலம் தொடரப்படக் கூடாது. இதனால் பிரித்தானியா உடனடியாக இதனை நிறுத்த வேண்டும். "எமது பாதுகாப்பு உண்மையில் தேவைப்படாத மக்கள் மீண்டும் அவர்களது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்" என பிரித்தானிய உள்துறைச் செயலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவானது சிறிலங்காவுக்கு மட்டுமல்ல, மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக மேற்கொள்ளப்படுகின்ற ஆப்கானிஸ்தான் மற்றும் கொங்கோ போன்ற நாடுகளுக்கும் ஆட்களைத் திருப்பி அனுப்புவதை தொடரும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட, இந்நாடுகளைச் சேர்ந்த மக்கள் தமது நாடுகளுக்கு திரும்பிச் சென்று பாதுகாப்பான வாழ்வை வாழக்கூடிய சூழல் ஏற்படும் வரை தனது நாட்டிலிருந்து மக்களைத் திருப்பி அனுப்புவதை நிறுத்தி பிரித்தானியா அரசாங்கமானது அது தொடர்பாக மீளவும் ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

ஹரி என்கின்ற தமிழ் இளைஞன் மீண்டும் அவரது சொந்த நாடான சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதை ஆதாரத்துடன் நிரூபிக்கின்றார். இவரைப் போல சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் பலர் தமது சாட்சியங்களை வழங்கியுள்ளனர். புகலிடம் கோரி பிரித்தானியா வந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் தமது நாடுகளில் பாலியல் ரீதியான வன்புணர்வுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருந்தனர். 2010-11 வரை எம்மால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தப் பெண்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறிலங்காவைச் சேர்ந்த பெண்களாகக் காணப்பட்டனர். இவர்களில் அரைவாசிப் பேருக்கு பிரித்தானியா புகலிடக் கோரிக்கை வழங்க மறுத்துள்ளது.

பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ள அனைவரதும் புகலிடக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதென்பது மிகக் கடினமானதாகும் எனவும், 2011ல் புகலிடக் கோரிக்கை கோரி விண்ணப்பித்த 17,496 பேரில் 68 சதவீதமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக பிரித்தானிய உள்துறைச் செயலக புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக 2006 தொடக்கம் 2010 காலப்பகுதியில் பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை மேற்கொண்ட சிறிலங்காப் பெண்களில் 80 தொடக்கம் 89 சதவீதமானவை ஆண்டுதோறும் நிராகரி க்கப்பட்டன. மிகத் தவறான முறையில் இவர்களது கோரிக்கைகள் மறுக்கப்படுகின்றன.

அண்மைய ஆண்டுகளில் இவ்வாறு தஞ்சம் கோரும் மக்களின் கோரிக்கை தொடர்பில் சரியான தீர்வை எட்டுவதை உறுதிப்படுத்துவதற்கான சில நகர்வுகளை பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்டுள்ளது. எனினும் சமூகத்தில் நலிவடைந்த பெண்கள் போன்றவர்களின் புகலிடக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்கான, அவர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்துகின்ற நகர்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. அதாவது பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பானது சிறப்புத் தேவைக்கு உட்பட்டவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவர்கள் தமது விண்ணப்பங்களை இலகுவான முறையில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முறைமை ஒன்று உருவாக்கப்படவில்லை.

எடுத்துக்காட்டாக, தமது நாடுகளில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து, அவற்றின் வடுக்களைச் சுமந்து நிற்கும் பெண்கள் தமது பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறுவதற்கான பெண் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் நேர்காணல் மேற்கொள்பவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகக் கடினமான காரியமாகும். இப் பெண்கள் அவர்களது நாடுகளில் எவ்வாறான துன்பங்களை அனுபவித்தனர் என்பதை வெளிக் கொண்டு வருகின்ற விழிப்புணர்வு பற்றாக்குறையாக உள்ளது. அத்துடன் இப்பெண்களின் கலாசார நம்பிக்கைகள் என்பன மேலும் இந்தப் பெண்கள் தமது பிரச்சினையை வெளிப்படுத்தி, புகலிடக் கோரிக்கையைப் பெற்றுக் கொள்வதில் தடையாக காணப்படுகின்றன.

இவ்வாறான காரணங்களினால், உண்மையில் துன்புறுத்தப்பட்டவர்கள், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்கள் போன்றோரை அடையாளங்கண்டு சரியான தீர்வை எட்டிக் கொள்வதில் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு தவறியுள்ளது.

பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்து அனைத்து நாட்டு மக்களினதும் சொந்த நாடுகளில் நிலவும் உண்மையான பிரச்சினைகளைக் கண்டறிவதற்கான கொள்கைப்பாடுகளையும், நடைமுறைகளையும் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கிக் கொள்ள வேண்டும் என நாம் அழுத்தங் கொடுக்கிறோம். இவ்வாறான நாடுகள் சில உண்மையில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடுகளாகக் காணப்படுகின்றன.

கடந்த 60 ஆண்டுகளாக பிரித்தானியாவில் தஞ்சம் வழங்கப்பட்டு வாழும் நூறுக்கும் மேற்பட்ட மக்கள், கடந்த வெள்ளியன்று பிறிக்ஸ்ரனில் ஒன்றுகூடியமையானது, பிரித்தானியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இருந்தும் தற்போதும் பிரித்தானியாவானது தான் பெற்றுக் கொண்ட இந்தப் பெருமையை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால், ஹரி போன்றவர்கள் பெற்றுக் கொண்டுள்ள கசப்பான அனுபவங்களைக் கவனத்திற்கொண்டு செயற்படவேண்டும். இதனை அடைவதற்கு பிரித்தானியா நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
மகிந்தவைப் பழி தீர்க்கும் பிரித்தானியா – கிளாஸ்கோ செல்லாததன் இரகசியம்
சிறிலங்கா விவகாரத்தில் நோர்வே ஆர்வம் காட்டவில்லை - சித்தார்த்தன்
ஐ.நாவுக்கான துணைத் தூதுவர் பதவியை ஏற்கத் தயார் – வெளிவிவகாரக் குழு முன் சிசன் தெரிவிப்பு
சிறிலங்காவுடனான உறவுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு முக்கிய பங்கு – சீன இராணுவ அதிகாரி
கிளாஸ்கோவில் இருந்து மகிந்தவைத் துரத்திய போர்க்குற்றச்சாட்டுகள் – தி ரைம்ஸ்
உள்நாட்டு விசாரணைக்கு மேற்கு நாடுகள் ஒத்துழைக்கவில்லை – சிறிலங்கா ஆணைக்குழு குற்றச்சாட்டு
பொது பல சேனாவுக்கு பாதுகாப்பளிக்கிறது சிறிலங்கா அரசு – அமெரிக்கா குற்றச்சாட்டு.
அடுத்து மியான்மார் செல்கிறார் சுஸ்மா – சிறிலங்காவுக்கு ஏமாற்றம்
ஐ.நா விசாரணைக்கு சரியான தகவல்களை சிறிலங்கா வழங்க வேண்டும் – ஜப்பானும் அறிவுறுத்துகிறது
சிறிலங்காவின் ஊடக சுதந்திரம் – அமெரிக்கா கவலை