ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 02 ^யாழ்ப்பாண மக்களின் காணிகள்: சிறிலங்கா இராணுவத்தின் அபகரிப்பும் மக்களின் கொந்தளிப்பும் ^இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது ^சிறிலங்காவிற்கு கடனாக நிதியை அள்ளி வழங்கும் சீனா - அச்சத்தில் இந்தியா ^அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது சிறிலங்கா அரசாங்கம் ^இந்தியாவுடனான உடன்பாட்டை முறிக்கிறது சிறிலங்கா? ^கொழும்பு துறைமுக தீவிபத்துக்கு நாசவேலையே காரணம்? ^திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு – சிறிலங்கா அரசு விசனம் ^இலங்கையர்களை தொடர்ந்தும் திருப்பி அனுப்புகிறது அவுஸ்திரேலியா ^வெற்றி விழாவில் படகு கவிழ்ந்ததால் கடற்படைத் தளபதியின் பதவி பறிப்பு? – ஆங்கில ஊடகம் ^
இன்றைய செய்திகள்
வெள்ளி, 24-05-2013
வியாழன், 23-05-2013
புதன், 22-05-2013
செவ்வாய், 21-05-2013
திங்கள், 20-05-2013
ஞாயிறு, 19-05-2013
சனி, 18-05-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
யாழ்ப்பாணத்திற்கான பயணம் - ஒரு பயணியின் குறிப்புகள்
ஏ-09 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புழுதி படிந்த இராணுவ சோதனை முகாமானது, 'வேறொரு' சிறிலங்காவுக்குள் நுழைந்து விட்டதொரு உணர்வை முதன் முதலாக எனக்கு ஏற்படுத்தியது.  இவ்வாறு 'IBTimes' ஊடகத்தில் Mark Johanson எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். [விரிவு]
தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? - பீரிஸ் விளக்கம்
மாகாணசபையின் அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான சட்டத் திருத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் சல்மான் குர்ஷித் எச்சரித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. [விரிவு]
'தமிழீழ சுதந்திர சாசனம்' : நாடுகடந்த தமிழீழ அரசு வெளியீடு
அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் மே 15ம் நாள் முதல் இடம்பெற்றிருந்த 'நாடுகடந்த தமிழீழ அரசின் முரசறைவு மாநாடு' முள்ளிவாய்க்கால் நிகழ்வேந்தல் நிகழ்வுகளுடன் 18ம் நாள் நிறைவு பெற்றது. [விரிவு]
புலிகளைப் பிளவுபடுத்தவே பிறேமதாச ஆயுதங்களைக் கொடுத்தாராம் – அவரது மகன் ஒப்புதல்
மாத்தயா தலைமையிலான புலிகளை பலப்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு எதிராக பிளவை ஏற்படுத்தவே அவர் அவ்வாறு ஆயுதங்களை வழங்கினார்” என்றும் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார். [விரிவு]
லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா, கடத்தப்பட்டதா? – புதிதாக கிளம்பும் சந்தேகம்
விமானத்தைக் கடத்துவதற்கு உக்ரேனிய நாட்டவரான விமானி மடோச்கோ அன்ஸ்ரோலி விடுதலைப் புலிகளுடன் பேரம் பேசியிருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். [விரிவு]
“மகாராணியின் வைரவிழாவுக்கு மகிந்தவை அழைத்தது தவறு” – றோயல் கொமன்வெல்த் சமூகத்தின் தலைவர்
[ ஞாயிற்றுக்கிழமை, 10 யூன் 2012, 01:36 GMT ] [ கார்வண்ணன் ]
பிரித்தானிய மகாராணியின் வைரவிழா நிகழ்வுகளில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்திருக்கக் கூடாது என்று றோயல் கொமன்வெல்த் சமூகத்தின் தலைவர் பீற்றர் கெல்னர் தெரிவித்துள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சியில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர்,

“ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்த இந்தத் தவறை மகாராணியோ பக்கிங்ஹாம் அரண்மனையோ செய்யவில்லை. கொமன்வெல்த் தான் அதைச் செய்தது.

சிறிலங்காவுக்கு எதிராக கடைசியாக பேர்த்தில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டிலேயே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாது போனால், கொழும்பில் நடைபெறவுள்ள அடுத்த கொமன்வெல்த் மாநாடு ஒரு பேரிடராகவே அமையும்.

சிறிலங்கா மீது அமைப்பு ரீதியாக கொமன்வெல்த் அழுத்தம் கொடுக்கலாம்.

சிறிலங்கா இந்த மாநாட்டை இழப்பதற்கு விரும்பும் என்று நான் கருதவில்லை.

கொமன்வெல்த்தின் பெருமைக்குரிய காலமான 1970கள், 80களில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போராட்டத்தை முன்கொண்டு சென்றது.

தென்னாபிரிக்காவின் மனிதஉரிமைகள் விவகாரம் குறித்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்துச் செயற்பட்டது.

சிறிலங்காவின் மனிதஉரிமைகளுக்காக மீண்டும் ஒருமுறை கொமன்வெல்த் அவ்வாறு செயற்பட முடியும் என்று நான் கருதுகிறேன்.

மனிதஉரிமை விவகாரங்களில் கொமன்வெல்த் பலத்தை தனது பலத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கு இதுவே சரியான தருணம்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 02
யாழ்ப்பாண மக்களின் காணிகள்: சிறிலங்கா இராணுவத்தின் அபகரிப்பும் மக்களின் கொந்தளிப்பும்
இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது
சிறிலங்காவிற்கு கடனாக நிதியை அள்ளி வழங்கும் சீனா - அச்சத்தில் இந்தியா
அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது சிறிலங்கா அரசாங்கம்
இந்தியாவுடனான உடன்பாட்டை முறிக்கிறது சிறிலங்கா?
கொழும்பு துறைமுக தீவிபத்துக்கு நாசவேலையே காரணம்?
திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு – சிறிலங்கா அரசு விசனம்
இலங்கையர்களை தொடர்ந்தும் திருப்பி அனுப்புகிறது அவுஸ்திரேலியா
வெற்றி விழாவில் படகு கவிழ்ந்ததால் கடற்படைத் தளபதியின் பதவி பறிப்பு? – ஆங்கில ஊடகம்