இந்திய - சிறிலங்கா உறவு குறித்து பிரிஐ வெளியிட்ட செய்தியை மறுக்கிறார் சேஷாத்ரி சாரி ^மகிந்தவைப் பழி தீர்க்கும் பிரித்தானியா – கிளாஸ்கோ செல்லாததன் இரகசியம் ^சிறிலங்கா விவகாரத்தில் நோர்வே ஆர்வம் காட்டவில்லை - சித்தார்த்தன் ^ஐ.நாவுக்கான துணைத் தூதுவர் பதவியை ஏற்கத் தயார் – வெளிவிவகாரக் குழு முன் சிசன் தெரிவிப்பு ^சிறிலங்காவுடனான உறவுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு முக்கிய பங்கு – சீன இராணுவ அதிகாரி ^கிளாஸ்கோவில் இருந்து மகிந்தவைத் துரத்திய போர்க்குற்றச்சாட்டுகள் – தி ரைம்ஸ் ^உள்நாட்டு விசாரணைக்கு மேற்கு நாடுகள் ஒத்துழைக்கவில்லை – சிறிலங்கா ஆணைக்குழு குற்றச்சாட்டு ^அடுத்து மியான்மார் செல்கிறார் சுஸ்மா – சிறிலங்காவுக்கு ஏமாற்றம் ^ஐ.நா விசாரணைக்கு சரியான தகவல்களை சிறிலங்கா வழங்க வேண்டும் – ஜப்பானும் அறிவுறுத்துகிறது ^சிறிலங்காவின் ஊடக சுதந்திரம் – அமெரிக்கா கவலை ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 29-07-2014
திங்கள், 28-07-2014
ஞாயிறு, 27-07-2014
சனி, 26-07-2014
வெள்ளி, 25-07-2014
வியாழன், 24-07-2014
புதன், 23-07-2014
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
சிறிலங்காவின் 'இனப்படுகொலை' - அனைத்துலகச் சட்டங்கள் கூறுவதென்ன?
சிறிலங்கா அரசாங்கம் இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் போன்றவற்றை மேற்கொண்டதால் இது குற்றவாளி என்பதை ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்தால் வரையப்பட்ட சட்டங்கள் உறுதிப்படுத்துகின்றமை இங்கு தெளிவாகும். [விரிவு]
அடுத்தடுத்து சிறிலங்கா செல்லும் சீன, ஜப்பானிய தலைவர்கள் – கொழும்புக்கு நெருக்கடி
இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில், முரண்பாடுகள் நிலவிவரும் சூழலில், இருநாடுகளினதும், தலைவர்களை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் எதிர்கொள்வதில் சிறிலங்கா நெருக்கடிகளை எதிர்நோக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [விரிவு]
சிறிலங்காவில் எழுச்சி பெறும் இஸ்லாமியர் எதிர்ப்பும் எதிர்கால ஆபத்துகளும் - தயான்
நாட்டில் பொது பல சேன என்கின்ற பௌத்த தீவிரவாத அமைப்பானது முஸ்லீம் சமூகத்தை தேசிய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியமை மிகப் பெரிய தவறாகும். [விரிவு]
இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்தது இந்தியா - ஜெனிவாவில் இரட்டை வேடம்
பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. [விரிவு]
ஐ.நா விசாரணைக் குழுவுக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டதா? – இந்திய வெளிவிவகார அமைச்சு பதில்
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து, விசாரிக்கும் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு இந்தியா நுழைவிசைவு வழங்க மறுத்ததா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார். [விரிவு]
அதிகாரபூர்வ தொலைபேசி மூலமே நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்தார் றிசாத் பதியுதீன் – ‘சண்டே ரைம்ஸ்‘ தகவல்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 01:12 GMT ] [ கார்வண்ணன் ]
மன்னார் நீதிவானுக்கு சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பான குற்றச்சாட்டை அடுத்து சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொலைபேசி அழைப்புகள் பற்றிய விபரங்களைச் சேரித்து வருகின்றனர்.

இந்தநிலையில், சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கத்தில் இருந்தே நீதிவானின் கைத்தொலைபேசிக்கு அழைத்துள்ளதாக அறியப்படுவதாக ‘சண்டே ரைம்ஸ்‘ தகவல் வெளியிட்டுள்ளது.

கைத்தொலைபேசி இணைப்பு வழங்குனரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் பற்றிய விபரங்களை தாம் கொரியுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.

அதேவேளை உதவி கண்காணிப்பாளர் சோமரத்ன தலைமையிலான மூன்று காவல்துறை குழுக்கள், போராட்டம் தொடர்பாகவும். நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

சம்பவ இடத்தில் இருந்த ஊடகவியலாளர்களின் காணொலி ஆதாரங்களை வைத்து 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், மன்னார் நீதிவான் யூட்சன் சிறிலங்கா நீதிச்சேவைகள் ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டில், கடந்த 17 மற்றும் 18ம் நாள்களில், றிசாத் பதியுதீன் என்று அறிமுகப்படுத்தியவரிடம் இருந்து தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்ததாக கூறியுள்ளார்.

தனது ஆதரவாளர்களை விடுவிக்காவிட்டால்,எதிர்காலத்தில் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தாம் மிரட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலர் மஞ்சுள திலகரட்ணவைச் சந்தித்து மன்னார் நீதிவானை இடமாற்றம் செய்யும் படியும் றிசாத் பதியுதீன் கோரியுள்ளார்.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள மஞ்சுள திலகரட்ண, “ அமைச்சர் பதியுதீன் என்னை சந்தித்து நீதிவானை இடமாற்றம் செய்யுமாறு கோரினார்.

இடமாற்றம் செய்வது நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் வேலை என்று நான் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தான் நீதிமன்றத்தின் மீதான தாக்குதலை நடத்தவோ அல்லது நீதிவானுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கவோ இல்லை என்று றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
இந்திய - சிறிலங்கா உறவு குறித்து பிரிஐ வெளியிட்ட செய்தியை மறுக்கிறார் சேஷாத்ரி சாரி
மகிந்தவைப் பழி தீர்க்கும் பிரித்தானியா – கிளாஸ்கோ செல்லாததன் இரகசியம்
சிறிலங்கா விவகாரத்தில் நோர்வே ஆர்வம் காட்டவில்லை - சித்தார்த்தன்
ஐ.நாவுக்கான துணைத் தூதுவர் பதவியை ஏற்கத் தயார் – வெளிவிவகாரக் குழு முன் சிசன் தெரிவிப்பு
சிறிலங்காவுடனான உறவுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு முக்கிய பங்கு – சீன இராணுவ அதிகாரி
கிளாஸ்கோவில் இருந்து மகிந்தவைத் துரத்திய போர்க்குற்றச்சாட்டுகள் – தி ரைம்ஸ்
உள்நாட்டு விசாரணைக்கு மேற்கு நாடுகள் ஒத்துழைக்கவில்லை – சிறிலங்கா ஆணைக்குழு குற்றச்சாட்டு
பொது பல சேனாவுக்கு பாதுகாப்பளிக்கிறது சிறிலங்கா அரசு – அமெரிக்கா குற்றச்சாட்டு.
அடுத்து மியான்மார் செல்கிறார் சுஸ்மா – சிறிலங்காவுக்கு ஏமாற்றம்
ஐ.நா விசாரணைக்கு சரியான தகவல்களை சிறிலங்கா வழங்க வேண்டும் – ஜப்பானும் அறிவுறுத்துகிறது