|
|
| பசில் – கோத்தா – லலித் அணியின் புதுடெல்லி பயணம் அடுத்த மாதத்துக்கு ஒத்திவைப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை 2012, 09:47 GMT ] [ கார்வண்ணன் ] |
சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான மூவரணி அடுத்தமாதமே இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத்துக்கான சிறிலங்காவின் அறிக்கையை சமர்ப்பிக்க முன்னதாக, பசில் ராஜபக்ச தலைமையிலான மூவரணி புதுடெல்லிக்குச் செல்லும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
ஐ.நா மனித உரமைகள் பேரவையின் மீள்ய்வுக் கூட்டத்துக்கான சிறிலங்காவின் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய இறுதிநாள், நாளை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் சி்றிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரை உள்ளடக்கிய இந்தக்குழு அடுத்தமாதம் 24ம் நாளே புதுடெல்லி செல்லவுள்ளதாக சண்டே லீடர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை சிறிலங்கா தொடர்பான மீளாய்வுக்குப் பொறப்பாக நியமித்துள்ள மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக இந்தியாவுடனான உறவுகளை கட்டியெழுப்பவே பசில் ராஜபக்ச தலைமையிலான மூவரணி புதுடெல்லி செல்லவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் மேலும் கூறியுள்ளது. |
|
|